மாநகரசபையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை - மட்டு. மாநகர முதல்வர் எச்சரிக்கை
மட்டக்களப்பு மாநகரசபையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.
பொது மக்களும் தமது பொறுப்பினை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும், பொதுமக்களும் மாநகரசபையினை முன்கொண்டுசெல்ல முடிந்த உதவிகளை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் வழங்கும் வரிப்பணம்
நாங்கள் 20 வட்டாரங்களில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளான வீதி அமைத்தல், திண்மக்கழிவு முகாமைத்துவம் செய்தல் வீதிகளுக்கு மின்விளக்குகள் பொறுத்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை செய்து வருகின்றோம். இந்த செயற்பாடுகள் அனைத்தும் இந்த 20 வட்டாரங்களிலும் வாழுகின்ற எமது மக்கள் மாநகரசபைக்கு வழங்குகின்ற அந்த வரிப்பணத்தில் தான் செய்யப்படுகின்றன.
அந்த வகையிலேயே தற்பொழுது 90 மில்லியன் ரூபா மட்டக்களப்பு மாநகர சபையில் நிலுவையாக உள்ளது. இந்த 90 மில்லியனும் 77 மில்லியன் ஆதணவரியாகவும், 13 மில்லியன் வியாபாரம் மற்றும் விளம்பர வரியாகவும் காணப்படுகிறது.
ஆகவே இத்தகைய இந்த நிலுவைகளை அறவீடு செய்வதற்காக எமது மாநகர ஆணையாளரின் ஆலோசனையின் கீழ் மாநகரசபையின் உத்தியோகத்தர்கள் இன்று முதல் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு 20 வட்டாரங்களிலும் உள்ள நிலுவைகளை அறவீடு செய்வதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
அந்த வேலைகளில் ஆரம்ப நிகழ்வு சற்று முன்பு எமது இந்த மாநகரசபையின் முன் மண்டபத்திலே ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டது. 77 மில்லியன் ஆதணவரியிலே 2022, 2023, 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரிய நிலுவை 62 மில்லியன்களாகவும் 2025 ஆம் ஆண்டுக்குரிய நிலுவை 15 மில்லியனாக மொத்தம் 77 மில்லியன்கள் காணப்படுகிறது.
எனவே இந்த மாநகர சபை ஊழியர்கள் உங்களின் வசதி கருதி உங்களது இருப்பிடத்திற்கு வந்து இந்த நிலுவைகளை சேகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். நீங்கள் அவர்களை இன்முகத்துடன் நாம் வரவேற்று இது நமது பிரதேசம் நமது மக்கள் வாழுகின்ற இந்த பிரதேசம் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்கின்ற அந்த நல்லெண்ண சிந்தனையோடு நீங்கள் எல்லோரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த நிலுவையினை செலுத்துமாறு மாநகர முதல்வர் என்ற வகையிலே உங்களை மிகவும் பணிவாக வேண்டுகின்றேன்.
கழிவு முகாமைத்துவம்
மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எட்டு வீதிகளும் அதனோடு இணைந்த எங்கள் கழிவு முகாமைத்துவம் மற்றும் உல்லாச பிரயாண துறை அபிவிருத்தி செய்வதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மாநகர சபையினால் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது.
இது தவிர விழுதிகளில் ஏற்பட்டிருக்கிற குன்றும் குழிகளை நாங்கள் மக்களின் வசதி கருதி அதை நிவர்த்தி செய்கின்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அத்தோடு இன்னும் அடுத்த மாதம் அளவில் நாங்கள் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் மாநகர சபையில் இருக்கின்ற சேகரிக்கப்பட்டிருக்கிற பணத்தை கொண்டு இந்த வட்டார மக்களின் முன்னுரிமை அடிப்படையிலே வட்டார மக்களின் நலன் கருதி அந்தந்த வீதிகளுக்கு வீதிகள் அமைப்பதற்கான பணிகளை நாங்கள் ஈடுபடுத்த உள்ளோம்.
உண்மையிலேயே பொதுமக்களால் எங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கட்டாக்காலி மாடுகளின் பிரச்சனை பாரிய ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கின்றது நாங்கள் கடந்த வாரம் இருந்து ஒரு விழிப்புணர்வை அந்த மாடுகளை வீடுகளில் வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு நாங்கள் அந்த விளம்பரங்கள் செய்கின்ற பணிகளில் எங்கள் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு அவர்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எமது கடந்த சபை அமர்வின் போது இதற்கான ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வும் எடுக்கப்பட்டது. அந்த தீர்வுக்கு அமைவாக இந்த கட்டாக்காலி மாடுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளாக நாங்கள் விளிப்புணர்வு செய்து வருகின்றோம். அவர்கள் அந்த மாடுகள் வீதிகளுக்கு வரும் போது அவர்களுக்கான சட்ட நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.









