மாநகரசபை முதல்வர்பதவி சுழற்சி முறையில் ரெலோவிற்கு
வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று (18.06.2025) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா மாநகரசபையில் தமிழ் கட்சிகளிற்கிடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி ஆட்சியினை கைப்பற்றியுள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்
அந்தவகையில் கூட்டணியின் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை சேர்ந்த உறுப்பினருக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மாநகர முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களிற்கு பின்னரான காலப்பகுதியில் சங்கு கூட்டணியின் மற்றொரு பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு (ரெலொ) முதல்வர் பதவியை சுழற்சிமுறையில் வழங்கவேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளிற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனவே குறித்த காலப்பகுதியில் மாநகரசபையின் முதல்வராக ரெலோவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார். என்று குறித்த அறிக்கையில் உள்ளது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 13 மணி நேரம் முன்

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! - 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
