அக்கரைப்பற்றில் மேயர் அதாவுல்லாவின் பங்கேற்புடன் நடைபெற்ற 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம்
அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்கள் துப்பரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைசாலின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் இந்த வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
இதன்போது சுமார் 2.5 கிலோமீட்டர் அளவிலான கடற்கரைப் பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கடற்கரைப் பிரதேசங்களை பேணிப் பாதுகாப்பது தொடர்பிலான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில் இடம்பெற்றது.
இதில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர், பிரதி மேயர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.





Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
