பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை: பிரபல உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள்
பிரித்தானியாவில் உள்ள Lidl பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருள் ஒன்றில் மயோனேஸில் கிருமிகள் இருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Lidl பல்பொருள் அங்காடிகளுக்கு , Potts Partnership Ltd என்னும் நிறுவனம் விநியோகிக்கும் உணவுப்பொருளில் மயோனேஸில் கிருமிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, அதை அந்த நிறுவனம் திரும்பப் பெற்றுவருகிறது.
Potts’ Truffle Mayonnaise என்னும், 230g அளவுள்ள மயோனேஸ் பொதிகளையே குறித்த நிறுவனம் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குள்ளான உணவுப்பொருள்
2024 - ஜூலை மாதம் காலாவதி திகதியிடப்பட்டதும், 18823 எனும் குறியீடு இடப்பட்டதுமான பொதிகளிலேயே இவ்வாறு பாதிப்புகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட விவரங்கள் கொண்ட மயோனேஸை வாங்கியவர்கள், அதை உண்ணவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், அதை அருகிலுள்ள Lidl அங்காடிகளில் கொடுத்து அதற்காக செலுத்திய பணத்தை முழுமையாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குள்ளான மயோனேஸ் உணவுப்பொருளானது, Listeria monocytogenes எனும் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கிருமியால், அதிக காய்ச்சல், உடல் வலி, உடல் நடுக்கம், வாந்தி வருவது போன்ற உணர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |