மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை போராட்டம்: யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை

Jaffna University of Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Kajinthan Nov 08, 2023 03:53 PM GMT
Report

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை போராட்டம் தொடர்பான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரைகள் காலங்காலமாக அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களினால் தமது கால்நடைகளை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

மகிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு

மகிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு

மேய்ச்சல் தரை

அண்மைய வருடங்களில், இந்தப் பிரதேசங்களில் இலங்கை அரசினால் சட்ட விரோதமான முறையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்தக் குடியேற்றங்களின் காரணமாக மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரைப் பிரதேசங்களினைத் தமிழ் கால்நடைவளர்ப்பாளர்கள் பயன்படுத்துவது தடைப்பட்டிருக்கிறது.

மேய்ச்சல் தரையினைப் பயன்படுத்தும் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன‌. அத்துடன் மேய்ச்சலுக்கு விடப்பட்ட அவர்களின் கால்நடைகளின் மீதும் வன்முறை பிரயோகிக்கப்படுகின்றது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை போராட்டம்: யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை | Mayilathamdu Madhavanai Protest Jaffna Uni Report

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சல் தரை மீது இதுவரை இருந்த உரித்து அகற்றப்பட்டமை அவர்களின் பொருளதாரத்தின் மீதும், வாழ்வாதாரத்தின் மீதும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் இந்தப் பகுதியில் ஒரு புத்தர் சிலையும் நாட்டப்பட்டது. இந்த உரிமை மீறல் தொடர்பிலே பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களது ஆதரவாளர்களும் பல மாதங்களாக அமைதி வழியிலே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அமைதிப் போராட்டம்

இந்த அத்துமீறல் செயன்முறையினையும், வன்முறையினையும் கண்டிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் சேர்ந்த தமிழ் மாணவர்கள் ஓர் அமைதிப் போராட்டத்திலே கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி அன்று இந்தப் பிரதேசத்திலே ஈடுபட்டனர்.

சட்டவிரோதமாக ஒன்றுகூடினர் என்ற தோரணையிலே, இந்தப் போராட்டத்திலே ஈடுபட்ட மாணவர்களிலே பலர் சந்திவெளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை போராட்டம்: யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை | Mayilathamdu Madhavanai Protest Jaffna Uni Report

அமைதி வழியில், கால்நடை வளர்க்கும் மக்களின் மேய்ச்சல் தரை மீதான உரித்துக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடிய பல்கலைக்கழக மாணவர்களினைப் பொலிஸார் கைது செய்தமையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மாணவர்களின் ஜனநாயக உரிமையின் மீது மேற்கொள்ளப்பட்ட மீறலாகவே இந்தக் கைதுகளை நாம் பார்க்கிறோம். வடக்குக் கிழக்கிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மக்களையும் மாணவர்களையும் கைது செய்யும் போக்குத் தொடர்வதனை நாம் இங்கு சுட்டிக்காட்டுகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர்: காசாவிற்கு எரிபொருள் விநியோகம் தடை

போர் நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர்: காசாவிற்கு எரிபொருள் விநியோகம் தடை

தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட அம்பிட்டிய தேரர்! (Video)

தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட அம்பிட்டிய தேரர்! (Video)

மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US