பண்ணையாளர்கள் மீது தொடரும் வன்முறை: நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை!
சட்டவிரோதமாக மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனையில் குடியேறியவர்களை நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, குறித்த பகுதியில் குடியேறியவர்களால் பண்ணையாளர்கள், பசுக்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டத்துறை, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் ஊடகத்துறை என அனைத்துத் தளங்களிலும் முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையில், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் அகிம்சை வழியில் 11ஆம் மாதம் 2ஆம் திகதி கச்சேரி முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,