ரஞ்சனுக்காக குரல் கொடுத்த மயந்த திஸாநாயக்க
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதியை வலியுறுத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் இது சம்பந்தமாக கவனம் செலுத்துவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணி, ஜனாதிபதியிடம் கையளிக்க கடிதம் ஒன்றில் கையெழுத்து பெற்று வருவதாகவும் மயந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு திரைப்பட கலைஞர்கள், எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam