வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மேதின ஊர்வலம்
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பிரதான மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் நேற்று(01)உணர்வு எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்பாக ஆரம்பமான மேதின ஊர்வலம் அங்கிருந்து குருமன்காடு, கலைமகள் விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்ததுடன், அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது.
இனப்படுகொலை
குறித்த கூட்டமானது முன்னனயின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பாெதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், முன்னியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ், மற்றும் கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் பெருமளவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் 'எங்கள் நிலம் எமக்கு வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிவேண்டும், வெடுக்குநாறி எங்கள் சொத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்' போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
