மன்னாரில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகள்
மன்னார் (Mannar) சாந்திபுரம் கிராம மக்கள் சித்திரை புத்தாண்டு மற்றும் மே தின நிகழ்வுகளை 'இணைந்த ஒருங்கிணைந்த கிராமம்' எனும் தொனிப்பொருளில் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
குறித்த நிகழ்வானது நேற்று (05.05.2024) நடைபெற்றுள்ளது.
பல்வேறு பிரச்சினைகள்
இந்த கிராம மக்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை பிரச்சினை மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு, இந்திய கடற்றொழிவாளர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த கிராம மக்கள் மிகவும் சிறப்பாக சித்திரை புத்தாண்டு மற்றும் மே தினத்தை ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.
குறித்த நிகழ்வில் கயிறுழுத்தல், கால்பந்தாட்டம், கிரிக்கெட், வொலிபோல், சறுக்குமரம் ஏறுதல் உள்ளடங்களாக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றுள்ளதுடன் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் : அ. ராயூகரன்