மே 9 தாக்குதல்! 4000இற்கும் மேற்பட்டோர் கைது
2022,மே 9ஆம் திகதி வன்முறை தாக்குதலை தொடர்ந்து 4,000 க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் கிட்டத்தட்ட 1,500 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் இறுதியாக குடியியல் செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர மற்றும் நடிகை தமிதா அபேரட்ன ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் லஹிரு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். துமிதா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அடையாள அணிவகுப்பு
கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி, நுவான் போபகே,சந்தேக நபர்கள் குறைந்தது ஒரு நாளாவது விளக்கமறியலில் வைக்கப்படுவதை பொலிஸார் உறுதி செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஏதுவாக சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தும் போது, பொலிஸார் அடையாள அணிவகுப்பை கோருகின்றனர்.
இதன் விளைவாக, அடையாள அணிவகுப்புக்கான தயாரிப்புகளை அனுமதிக்க, சந்தேக நபர்களை குறைந்தது ஒரு வாரமாவது நீதவான்கள் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது என்று போபகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஹசந்த ஜீவ குணதிலக்க மற்றும் வென் கல்வௌ சிறிதம்ம தேரர் போன்ற போராட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் மூன்று அடிப்படை மறுப்பு
விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்குகள் செப்டம்பர் 19ஆம்
திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
