கடன் நெருக்கடியை சமாளிக்க அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் - பரிஸ் கிளப்
இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியை சமாளிக்க அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என 22 கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (17.10.2022) டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக பரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸ் உறுதியளித்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களின் போது பரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸை சந்தித்த போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Met with Mr. William Roos, Co-Chairman of the Paris Club during the IMF/World Bank Annual Meetings. Mr. Roos assured The Paris Club’s fullest support for Sri Lanka’s ongoing efforts to find an early resolution to its debt crisis. pic.twitter.com/3l0ZMElv34
— Shehan Semasinghe (@ShehanSema) October 17, 2022