நீரேந்து பகுதிகளில் போதுமான மழை! மின்சார தடை 5 மணித்தியாலங்கள்!
நீரேந்துப் பகுதிகளில் போதிய மழை பெய்து வருவதால், அனல் மின் நிலையங்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியமில்லை.
எனவே அதிகபட்சமாக ஐந்து மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
Soijitz மற்றும் மேற்கு கரை மின் உற்பத்தி நிலையங்களில் டீசல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் Soijitz மின்நிலையத்தில் உள்ள எரிபொருள் ஒரு நாளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
அதே சமயம் மேற்கு கடற்கரை மின்நிலையத்தில் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு டீசல் உள்ளது என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அனல் மின் நிலையங்களைத் தவிர அனைத்து மின் உற்பத்தி மூலங்களையும் கருத்தில் கொண்டு, அதிகபட்ச மின்வெட்டு நேரம் 5 மணித்தியாலங்களாக இருக்கும் என்று மின்சார சபையின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 11 நிமிடங்கள் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
