திடீரென காணாமல்போயுள்ள 20 வயது இளைஞன்! பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை
மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் இருபது வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த இளைஞன் காணாமல்போயுள்ளதாக அவரது தாயார் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொது மக்களிடம் பொலிஸார் உதவிகோரியுள்ளனர்.
மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தினை சேர்ந்த ஆராச்சியின் விதுஷிகா நவஞ்சன பண்டார என்ற ஐந்தடி ஏழு அங்குலம் உயரமான இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த ஜூன் மாதம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் துறவற வாழ்விற்கு சென்றுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம், தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக வீடு திரும்பிய அவர், கோவிலுக்குச் சென்றிருந்த நிலையில், காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல் தெரிந்தால் தொடர்புக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்
கடைசியாக இந்த இளைஞன் தனது சகோதரியுடன் தொடர்பு கொண்டு தான் கேகாலையில் இருப்பதாகவும் அதன் பின்னர் இந்த இளைஞன் தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே காணாமல்போன இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாவனெல்ல: 071 – 8591418, மாவனல்லை பொலிஸ் நிலையம்: 035 – 2247222
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam