மாவனல்லையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மாவனெல்லை (Mawanella) படிதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாவனெல்லை பகுதியை சேர்ந்த ஜயதிலக்க என்ற 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் கூரிய வாள்களுடன் மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயிரிழந்த நபர் பெண் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருப்பதை அவதானித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம்
இதனையடுத்து குறித்த பெண்ணை காப்பாற்ற சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை அவர் வாளால் தாக்கியுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணை காப்பாற்ற சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் சிகிச்சைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam