தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு சிலை திறப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் நினைவுச்சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்படவுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வுகள்
மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்தச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து, யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் சா.செ.இளங்கோவன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நினைவுப் பேருரைகளைத் தொடர்ந்து மாவை சோ.சேனாதிராஜாவின் முதலாமாண்டு நினைவுமலர், பேராசிரியர் பாஞ்.இராமலிங்கம் எழுதிய 'ஈழ அண்ணல் சோ.மாவை சேனாதிராஜா' ஆகிய இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன.
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam