சஜித் தரப்பின் இரகசிய சந்திப்பு தொடர்பில் உண்மையை அம்பலப்படுத்திய மாவை
"ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதாவது, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் மாவட்ட ரீதியாகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீர்மானத்துக்கான எதிர்வினை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது உள்ளிட்ட பல தகவல்களை உள்ளடக்கி வருகின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
