தமிழரசுக்கட்சியில் புலிநீக்க அரசியலை மாவை ஆரம்பித்தாரா (Video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு
விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என வரிக்குவரி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் பிரதான கட்சியாக கடந்த காலங்களில் தற்போது வரை செயற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்தானது பலராலும் விமர்சனத்திற்குள்ளான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிய காலத்தில் இருந்த மாவை சேனாதிராஜா எதற்காக நாடாளுமன்றத்தில் சுமந்திரன் கூறியது போன்று விடுதலைப்புலிகள் என விழித்ததை நாடாளுமன்ற கண்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் என சுமந்திரன் கடுமையான எதிர்ப்பினை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
இனத்தை அவமதிக்கும் செயல்
அதன் பின்னர் தமிழரசுக்கட்சி முன்வைத்துள்ள கருத்தானது சாணக்கியனை புலிகள் என்று சொல்லியமை இனத்தை அவமதிக்கும் செயலாகும்.
அப்படியாயின் கடந்த காலங்களில் இனத்தினுடைய ஏக பிரதிநிதிகள் என விடுதலைப்புலிகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசு கட்சி அடங்கலாக கூறியதினுடைய பின்னணிகள் அனைத்தும் பொய்யானவையா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
அதிலும் இப்போதிருக்கும் சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் அந்த கட்டமைப்புக்களுடனும் பல்வேறுபட்ட தொடர்புகளை வைத்திருந்தவர் என இன்று வரை கூறக்கூடிய மாவை சேனாதிராஜா “புலிகள்” என்று சொல்லியமை இனத்தை அவமதிக்கும் செயல் என எந்த அடிப்படையில் குறிப்பிடுகின்றார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் இப்போதிருக்கக்கூடிய தமிழரசுக்கட்சி புலிநீக்க அரசியலை வெளிப்படையாக செய்ய எத்தனிக்கின்றதா? தென்னிலங்கையில் இருக்கக்கூடிய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் விடுதலைப்புலிகள் என விமர்சிப்பது இயல்பாக இருக்கின்றது.
விடுதலைப்புலிகளே அவர்கள் தமிழ் மக்கள் என கூறும்போது விடுதலைப்புலிகள் என்பதே அவர்கள் மனதில் இருக்கும் விடயமாகும்.
எதிர்த்தரப்பே இப்படி பார்க்கும்போது மாவை சேனாதிராஜா குறிப்பிட்டிருப்பது சமூக மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வளைத்தளங்களில் சாணக்கியன் வெளியிட்ட கருத்து
இதேவேளை சமூக வளைத்தளங்களில் நாடாளுமன்ற சானக்கியன் தெரிவித்த கருத்தொன்று வெளியாகி இருந்தது.
என்னவெனில் விடுதலைப்புலிகள் என என்னை கூறியது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றதாக தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு பின்னரோ விடுதலைப்புலிகள் என கூறியதற்கு எதிராக அவர் எங்கும் எதிர்ப்பு வெளியிடவில்லை.
சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்ற ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள் என கூறியதை கண்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் என கூறினார்களாயிருந்தால் இனிவரும் காலங்களில் தமிழரசு கட்சி எந்த அடிப்படையில் அரசியலில் தேர்தலில் களமிறங்க காத்திருக்கிறது.
தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குச்சேகரிப்பிற்காக விடுதலைப்புகள் என்ற உச்சரிப்பை பயன்படுத்துமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் மாவை சேனாதிராஜா மட்டுமல்ல தமிழரசு கட்சியின் நிலைப்பாடை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பேச்சை தாங்கிக் கொள்ள முடியாமல், கேட்ட கேள்விக்கும் பதில் சொல்வதற்கு இடமளிக்காமல், அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றவர்கள், சாணக்கியனை புலிகள் என குற்றம் சுமத்தி பாவித்த வார்த்தைகள் நாடாளுமன்ற நடைமுறையில் இருந்து நீக்கப்பட வேண்டியவைகள் என தான் நினைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழில் வைத்து அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் பாவிக்க வேண்டிய வார்த்தைகள், பாவிக்கக்கூடாத வார்த்தைகள் என்று பகுத்து அதற்கு தீர்ப்பு சொல்ல வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கிறது.
கண்டிக்கப்பட வேண்டிய விடயம்
ஆனபடியால் சாணக்கியனின் உரைக்கு, அவரை புலிகள் என வர்ணிப்பது எங்களுடைய இனத்தை, அவர்களுடைய குரலை, அவர்கள் நீதிக்காக குரல் கொடுப்பதை மறுத்து, புலிகள் என்று சொல்லி எங்களுடைய இனத்தை அவமதித்தமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
இவை காலம் காலமாக இலங்கை நாடாளுமன்றத்திலும் தென்னிலங்கை சமூகத்திடம் இருந்தும், சில அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்தும் வருகின்ற வார்த்தைகள் என்பதை நாம் நினைவுகூர்ந்து கொள்கிறோம்.
நாடாளுமன்ற சபாநாயகர் இதற்கு பொருத்தமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.