மாவிலாறு அணைக்கட்டு சீரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்..
அண்மையில் ஏற்பட்ட கடுமையான இயற்கை அனர்த்தத்தால் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்ட மாவிலாறு அணைக்கட்டின் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, சேதமடைந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய வீதிகள் செப்பனிடும் பணியும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாவிலாறு அணைக்கட்டு
மாவிலாறு பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து, வெள்ளநீர் விரைவாக வடிந்துவரும் நிலையில், வரவிருக்கும் பருவமழைக்கு முன்பாகவே அணைக்கட்டினை அவசரமாக சீரமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனை தாமதமின்றி சீரமைத்தால் மட்டுமே விவசாய நடவடிக்கைகள் வழமைபோல் தொடர இயலும் என தொடர்புடைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.