வலிகள் நிறைந்த வரலாற்றை நினைவுகூருகிறது ஈச்சங்குளம் துயிலுமில்லம்
உரிமை கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை வடக்கு - கிழக்கு தாயக தேசம் வலிகளுடன் நினைவுகூருகின்றது.
தாயக பூமி எங்கும், சிவப்பு - மஞ்சள் கொடிகளுடன் மாவீரர்களை, தாயக சொந்தங்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் திரண்ட பெருந்திரளான மக்கள் உயிர்துறந்த வீரர்களை எண்ணி அழுது புலம்பி நினைவுகூர்ந்துள்ளனர்.
உணர்வுபூர்வ அஞ்சலிகள்
தங்களது உரிமைக்காக குரல் கொடுத்து மாய்ந்து போன தமது மாவீரர்களை நினைத்து, இன்று மாலை அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.
“தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்ற பாடல் ஒலிக்கும் நேரம் கண்ணீர் ததும்ப அனைவரும் வீர மரணம் அடைந்த தமது வீரர்களை, உறவுகளை எண்ணி உணர்வு பூர்வ அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
போரால் மரணித்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட நூற்றுக்கணக்கானோர் தீபம் ஏற்றி அழுது புலம்பி கண்ணீர் மல்லக உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.
பிரதான சுடர் இரண்டு மாவீரர்களின் தாய் ஒருவரால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவு சுமந்த பாடல்களும் ஒலிக்கவிடப்பட்டிருந்தன. கலந்து கொண்ட அனைவருக்கும் மாவீரர் நினைவாக ஒவ்வொரு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
செய்தி,புகைப்படங்கள் - திலீபன்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
