சம்பூர் - ஆலங்குளம் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்
தமிழர் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் வெள்ளிக்கிழமை (27.11.2026) மாலை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது, மாவீரர்களை நினைவுகூரும் வகையில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்து, அவர்களுக்கான அஞ்சலியை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
மாவீரர் நாள் நினைவேந்தல்
மெழுகுவர்த்திகளின் ஒளியில் மாவீரர்களை நினைவுகூர்ந்த இந்த நிகழ்வு, அங்கு உணர்வுபூர்வமான சூழலை ஏற்படுத்தியிருந்தது.

தலைமுறைகள் கடந்தும் மாவீரர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் வகையில், திருகோணமலையின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




