மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் வேழமாலிகிதனின் அறிவிப்பு..
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு மதுபான சாலைகள், இறைச்சிக்கடைகளை மூடி பொது நிகழ்வுகளை அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் நிறுத்தி புனிதத்தன்மையை பேணுமாறு கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தலுக்காக அனைத்து துயிலுமில்லங்களும் தயாராகி வருகின்றன.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், தேராவில், முழங்காவில் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன.இம்முறை ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

துயிலுமில்ல காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்திருக்கின்றார் இதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri