தீயுடன் சங்கமமான மாவையின் உடல்
புதிய இணைப்பு
மாவை சேனாதிராஜாவின் உடல் தற்போது தகனம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்த மூத்த அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்வதற்கான தற்போது வீட்டியில் இருந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்து.
இன்று காலை 08.30 மணி முதல் சமயக் கிரியைகள் இடம்பெற்று பின்னர் முக்கிய அரசியல்வாதிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதுடன், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் மாவிட்டபுரத்தில் உள்ள வீட்டின் முன்றலில் வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போது தகன நடவடிக்கைகளுக்காக அவரது உடல் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்து.
முதலாம் இணைப்பு
தமிழரசுக் கட்சியின், மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்.மாவிட்டபுரம் பகுதியில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக மாவை சேனாதிராஜாவின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது சமய கிரியைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது, உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பெருமளவான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மாவை சேனாதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறீதரன், குகதாசன், சிறீநேசன், ஜீவன் தொண்டமான், மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பலர் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன், மாவை தொடர்பான தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.