36 பேரின் உயிரை பறித்த ஹவாய் தீவின் காட்டுத்தீ
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள மவுயி தீவின் நகரமான லஹைனாவின் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமன்றி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தீவிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் இந்த தீயால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஹைனா நகரில் கடந்த (08.08.2023) ஆம் திகதி அதிகாலையில் காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் மவுயி தீவில் உள்ள 35,000 க்கும் மேற்பட்ட மக்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளதாக ஹவாய் அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
2,100க்கும் மேற்பட்டோருக்கு அடைக்கலம்
மேலும் 2,100க்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளது.
Update: At least 36 people have died in the Lahaina fire in Hawaii, Maui County according to their website.
— bennydiego (@bennydiego) August 10, 2023
Officials said that 271+ structures were damaged or destroyed and dozens of people injured.#ClimateChangeIsReal #MauiFire pic.twitter.com/MMGUlWdmd9
மவுயி தீவில் பலத்த வேகத்தில் வீசிய காற்று சற்று குறைந்துவிட்டதால் தற்போது தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்த காட்டுத்தீயினால் மவுயி தீவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் காட்டுத்தீயை அணைத்து, மீட்புப்பணியை தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
