மாத்தளையில் மாணவர்கள் பயணித்த வாகனம் விபத்து! - ஒருவர் பலி; 8 பேர் காயம்
மாத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றில், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர் குழு ஒன்று பயணித்த, கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
மாத்தளை - தொட்டகமுவ பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
19 வயதான மாணவன் பலி

இதன்போது, 9 மாணவர்கள் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 19 வயதான மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர்கள், பலபாத்வல பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில், நட்புறவு
ரீதியான சந்திப்புக்குச் சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam