மத்தள விமான நிலையத்திற்கு உயிர் கொடுக்கும் நாமலின் மாமனார்
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ச விமான நிலையம் இன்று முதல் மீண்டும் சர்வதேச நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
கடந்த காலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று விமான நிலையமாகவும், வான்வெளிக்கு மேலே பறக்கும் விமானங்களை அவசரமாக தரையிறக்கும் விமான நிலையமாகவும் மத்தள பயன்படுத்தப்பட்டது.
ரஷ்யாவில் இருந்து 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்த நாட்டிற்கு வரும் ரெட்விங்ஸ் போயிங் 777-200 விமான நிறுவனம், புத்தாண்டு முதல் வாரத்திற்கு 2 புதிய விமானங்களை இயக்க உள்ளது. மேலும் இது 3 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
அதற்காக வெளிநாட்டு விமான சேவைக்கு வழங்கப்படும் வெளிநாட்டு விமான சேவைக்கான அனுமதிப்பத்திரம், பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பி.ஏ.ஜெயகாந்தவினால் இந்த விமான சேவையின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மாமனாருமான திலக் வீரசிங்கவிடம் வழங்கப்பட்டது.
அதற்கமைய, நாமல் ராஜபக்ஷவின் மாமனாரின் கண்கானிப்பின் கீழ் மத்தள ராஜபக்ச விமான நிலையம் இன்று முதல் மீண்டும் சர்வதேச நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.