மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு கையளிக்க நடவடிக்கை
சர்வதேச விமான நிலையமான மத்தள விமான நிலையத்தின் (Mattala Rajapaksa International Airport) நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றுவது தொடர்பான பிரேரணைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பிரேரணையானது, இந்த வாரத்திற்குள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இது தொடர்பான அமைச்சரவை முன்மொழிவை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், சீனாவிடம் (China) பெற்ற 307 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் கட்டப்பட்ட மத்தள விமான நிலையமானது பெரும் நட்டத்தில் இயங்கி வருகிறது.
எனவே, இதன் நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றுவது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த விமான நிலையமானது தற்போது ரஸ்யா மற்றும் சில மத்திய ஆசிய நாடுகளில் இருந்து சுற்றுலா விமானங்கள் வந்து செல்ல பயன்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
