மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்(Video)
இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தினையும் கொண்ட வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் இன்று(07.08.2023) மாமாங்கேஸ்வரரின் வருடாந்த மஹோற்சவ கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது.
மூர்த்தி தீர்த்தம் தலம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயமானது கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமாக கருதப்படுகின்றது.
விசேட பூஜைகள்
வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று(06.08.2023) மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் இன்று காலை முதல் விசேட கிரியைகள் நடைபெற்று மூலவர் அபிசேகம் மற்றும் விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலைக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலை உள்வீதி வலம்வந்து கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று, அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடனும் நாத வேத மந்திரம் முழங்க பூமழை பொழிய கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
