காணொளி வெளியானதால் ஏற்பட்ட பெரும் சர்ச்சை! - பிரித்தானிய சுகாதார செயலாளர் பதவி விலகினார்
பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சக ஊழியர் ஒருவருடன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் இருக்கும் காணொளி வெளியாகியிருந்தது.
இந்த காணொளி வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது இராஜினாமா கடிதத்தை பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
“ கோவிட் தொற்றை எதிர்த்துப் போராட ஒரு நாடாக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், என்னுடைய வாழ்க்கை சம்பந்தமான செய்திகள் அதை திசை திருப்புவதாக கருதுகிறேன்.
மேலும், எனது செயலுக்கான நான் மீண்டும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனது குடும்பத்தினரிடமும் அன்பானவர்களிடமும் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்.” என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் “உங்கள் ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி....
பிரித்தானிய சுகாதார செயலாளரின் மோசமான செயல்! - கடும் கோபத்தில் பொது மக்கள்