பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மாணவனின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்
திஹகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உதவி பொலிஸ் பரிசோதகர் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திஹகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மாத்தறை - கட்டுவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய ஹரேஷ் ஹசங்க தேஷான் என்ற சிறுவனே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியிருந்தார்.
மாணவனின் உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்
இந்நிலையில், காயமடைந்த மாணவனின் உடல் நிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்ததை விட தற்போது முன்னேற்றமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சிறுவனுக்கு நேற்றிரவு கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுவனின் தலையில் இருந்து அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டதை நிறுத்துவதற்காக இவ்வாறு சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறுவனுக்கு இன்றிரவு மற்றொரு சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
