யாழில் மழையை சாதகமாக பயன்படுத்தி பாரிய திருட்டு
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள், மழையை சாதகமாகப் பயன்படுத்தி சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் 8 இலட்சம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
அச்சுவேலி, இராச பாதை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (26.11.2024) திங்கட்கிழமை கடும் மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூன்று பேர் கைது
மோப்ப நாய் மற்றும் தடயவியல் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam