இன்று முதல் பல துறைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் - முடங்குமா இலங்கை..!
இலங்கை முழுவதும் இன்று (09.03.2023) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த தொடர் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பில் தீர்மானம்
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அரிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதாரத் துறை உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களின் ஒன்றிணைந்த சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று முதல் பல துறைகளின் சேவைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி சுமார் 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முழு நாட்டையும் மூடும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
தீர்க்கமான நடவடிக்கை
மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக பல தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். தொழில் வல்லுநர்கள் சங்கத்தில் உள்ள பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள், இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கும்.
13ஆம் திகதிக்கு பிறகு, இந்த 15 துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்களும் மிகத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 15ஆம் திகதி இந்த நாடு முடங்கும், இந்த நாடு மூடப்படும்.
அணிவகுத்து நிற்கும் தொழிற்சங்கங்கள் உச்சகட்ட நடவடிக்கைக்கு பேரணியாக செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
எதிர்வரும் 13ஆம் திகதி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாக தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
