15ஆம் திகதி இலங்கை முடங்கும்! இந்த நாடு மூடப்படும் - எடுக்கப்பட்ட தீர்மானம்
எதிர்வரும் 15ஆம் திகதி சுமார் 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முழு நாட்டையும் மூடும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இந்த தொழில்சார் நடவடிக்கைகள் நாளை (09.03.2023) முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 9ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பல தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். தொழில் வல்லுநர்கள் சங்கத்தில் உள்ள பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள், 9ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கும்.
13ஆம் திகதிக்கு பிறகு, இந்த 15 துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்களும் மிகத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 15ஆம் திகதி இந்த நாடு முடங்கும், இந்த நாடு மூடப்படும்.
அணிவகுத்து நிற்கும் தொழிற்சங்கங்கள் உச்சகட்ட நடவடிக்கைக்கு பேரணியாக செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
எதிர்வரும் 13ஆம் திகதி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாக தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கை முழுவதும் நாளை (09.03.2023) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த தொடர் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் (07.03.2023) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அரிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட ஒன்றிணைந்த சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
சந்திப்பில் தீர்மானம்
இந்த சந்திப்பில் வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் வரிக்கொள்கைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல சேவைகள் ஸ்தம்பிப்பதால் நாடு முடங்கும் சாத்தியம் காணப்படுவதாக சமூக அவதானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
