இலங்கையில் மற்றுமொரு நெருக்கடி - அரிசிக்காக நீண்ட வரிசை
நாட்டின் பல பகுதிகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில கடைகளில் விற்பனை செய்வதற்கு போதுமான அளவு அரிசி இல்லாமல் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரிசிக்கு தட்டுப்பாடு
அரிசிக்காக கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் வழங்குனர்களினால் இதுவரை விநியோகம் செய்யவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
விற்பனையாளர்கள் அரிசிகளை பதுக்கி வைத்துள்ளமையினால் இந்த பற்றாக்குறையை உருவாகியுள்ளது.
இதேவேளை, சுப்பர் மார்க்கெட், சதோச விற்பனை வலையமைப்பில் அரிசி விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளருக்கு அரிசி எத்தனை கிலோ என அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அரிசி விநியோகம்
அரச கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதால் அரிசியை பெற்றுக் கொள்வதற்காக சதொச விற்பனை நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.