பொருட்களின் விலைகளை குறைக்க நிதியமைச்சர் வகுத்துள்ள பாரிய திட்டம்
எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு காலத்திற்குள் மக்களுக்கு பெரியளவில் நிவாரணங்களை வழங்க முடியும் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன (S.M.Chandrasena) தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில் காய்கறிகள் உட்பட உணவு பொருட்களின் விலைகள் பெருமளவில் குறையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து கிராமங்களுக்கு நிதியை வழங்கி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஏற்கனவே இதற்கான மிகப் பெரிய வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளார்.
இதன் பிரதிபலன்கள் ஏப்ரல் மாதத்திலேயே கிடைக்கும் எனவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நிபுணர்கள் என்னக் கூறினாலும் எவரும் அச்சப்பட வேண்டியதில்லை, எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு பாரியளவில் நிவாரணங்கள் கிடைக்கும் எனவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
