கோப் குழுவில் அம்பலமாகிய கப்பல் கூட்டுத்தாபனத்தின் பாரிய நஷ்டம்
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் தனக்குச் சொந்தமான 6 இணை நிறுவனங்களில் சுமார் 63 கோடி (630 மில்லியன்) ரூபா முதலீட்டு செய்துள்ள நிலையில் ஒட்டுமொத்தமாகவே வருடாந்த இலாபமாக வெறும் 4 லட்சம் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் கோப் குழு விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
குறித்த ஆறு இணை நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் கப்பல் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் அங்கம் வகித்து வந்துள்ளனர்.
நிதி கையாடல்கள் ஏதேனும் இடம்பெற்றதா
அப்படியிருந்தும், நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துவதற்கோ அல்லது இலாபத்தை அதிகரிப்பதற்கோ இந்த அதிகாரிகள் எவ்வித உருப்படியான பங்களிப்பையும் வழங்கவில்லை என நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகாரிகள் வெறும் பதவிகளை மட்டுமே அலங்கரித்தனரா என்ற சந்தேகமும் இதனால் எழுந்துள்ளது.

அத்துடன் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் ஒட்டுமொத்த முகாமைத்துவம், நிதிப் பயன்பாடு மற்றும் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளின் மந்தகதி குறித்து கோப் குழு மிக ஆழமாக ஆராய்ந்துள்ளது.
திறமையற்ற நிர்வாகமே இந்த நஷ்டத்திற்குப் பின்னணியில் உள்ளதா? அல்லது நிதி கையாடல்கள் ஏதேனும் இடம்பெற்றதா? என்ற கோணத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
நிதி வீணடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி
இலங்கையின் கடல்சார் வணிகத் துறையில் பிரதான தூணாக இருக்க வேண்டிய ஒரு பொது நிறுவனம், இவ்வாறு நிதி முகாமைத்துவத்தில் படுதோல்வி அடைந்திருப்பது ஒட்டுமொத்த பொருளாதாரப் பின்னடைவையும் பிரதிபலிக்கிறது.

குறிப்பாக மனிதவள மேலாண்மையில் உள்ள குறைபாடுகளும், கப்பல் இயக்கங்களின் திறமையின்மையும் இந்த வீழ்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாரிய நிதி வீணடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கப்பல் கூட்டுத்தாபனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பை முற்றாக சீரமைக்கவும் கோப் குழுவினால் அதிரடியான பல பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறை வாயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்..! சற்றுமுன்னர் நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட தகவல்
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை
தமிழருக்கு சொந்தமான பாரிய பீச் ஹோட்டல் எரியூட்டப்பட்ட கொடூரம்! மைக்கேல் ராபர்ட்ஸ் என்பவரால் வெளியிட்டுள்ள தகவல்கள்
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri