கொழும்பில் பாரிய காணி மோசடி அம்பலம்
பொரளை, கோட்டை வீதியில் அமைந்துள்ள காணியொன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
136 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு செய்த குற்றச்சாட்டில், ராஜகிரியவைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
87.5 பேர்ச் காணியை போலிப் பத்திரம் மூலம் விற்பனை செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Hultsdorf இலக்கம் 2 நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri

டயானாவின் மரணத்தால் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: கண்டுபிடித்த நபர் யார் தெரியுமா? News Lankasri

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
