மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்! உண்மையை உடைத்த முன்னாள் ஜனாதிபதி
2005 - 2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜக்சவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே இலங்கையின் தற்போதைய வீழ்ச்சிக்கு காரணம் என ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2005 - 2014 வரையான காலப்பகுதியில் காணப்பட்ட ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகளின் காரணமாகவே நாட்டு பொருளாதாரம் இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
மஹிந்த ராஜக்சவின் ஆட்சி காலத்தில் அரசாங்கத்தினால் பல ட்ரில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது. இந்த மோசடிக்கான பணத்தை செலுத்துவதற்காகவே நாம் இன்றும் கடன் மேல் கடன் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
மோசடி செய்வதற்காகவே கடன் பெற்றனர். ஒரு இலட்சத்தில் நிறைவு செய்யப்பட வேண்டிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை 3 இலட்சமாக்கினர்.அனைத்து வேலைத்திட்டங்களையும் இதே போன்று மூன்று மடங்காக்கினர்.
மத்தள விமான நிலையத்தை அமைத்தனர். அங்கு ஒரு விமானம் கூட செல்வதில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்தனர். அது முழுமையாக கேலிக்குரியது.
என்னால் ஆரம்பிக்கப்பட்ட நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலைய வேலைத்திட்டத்திற்கு 280 மில்லியன் டொலர் மாத்திரமே மதிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் இந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய சீன நிறுவனத்திடம் இவர்கள் 140 மில்லியன் டொலரை மேலதிகமாகக் கோரினர்.
சீன நிறுவனம் அவ்வாறு வழங்க முடியாதெனக் கூறியது. இதனால் மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் வேலைத்திட்டத்தை 520 மில்லியன் டொலருக்கு கையெழுத்திட்டனர். இவ்வாறான மோசடிகளின் காரணமாகவே நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளது.
தற்போது மத்திய வங்கியும் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
எந்தவொரு நாட்டிலும் அரசாங்கம் தனியார் வங்கிகளை நாடுவதில்லை. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமும் மேலும் நட்பு நாடுகளிடம் மாத்திரமே கடன் பெற்றுக் கொள்ளப்படும்.
இவற்றிடமிருந்து ஆகக் கூடியது நூற்றுக்கு ஒரு சதவீத வட்டிக்கு மாத்திரமே கடன் பெறப்படும். ஆனால் இவர்கள் நூற்றுக்கு 9 சதவீத வட்டிக்கு கடன் பெற்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri