ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மிக அருகில் பாரிய தீப்பரவல்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மிக அருகில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹீத்ரோ விமான நிலையத்தின் டெர்மினல் 4இல் இருந்து இரண்டு மைல் தொலைவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஃபெல்டாமில் ஹட்டன் வீதிக்கு அருகில் புல் தீயில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதினைந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹீத்ரோ செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில். "விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட தீ காரணமாக, இன்று மதியம் ஓடுபாதைகளை மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தீப்பரவல் விமான நிலையத்தின் நடவடிக்கையை பாதிக்கவில்லை என்பதுடன் திட்டமிட்டபடி விமானங்கள் பரப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan