கட்டடபொருள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: கோடிக்கான பொருட்கள் எரிந்து நாசம்(Video)
கிளிநொச்சி - சேவியர் கடைச் சந்திக்கருகில் இயங்கி வந்த அமுத கடல் கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று (02) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய தீ அனர்த்தம் காரணமாகக் கோடிக்கணக்கான பெறுமதியான பொருட்கள் எரிந்து அழிந்துள்ளன.
மின்சார ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவினர் சென்று தீயினை 11 மணியளவில் முழுமையாகக் கட்டுப்படுத்தினார்கள்.
கிளிநொச்சியில் உள்ள பாரிய கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் ஒன்றாக இயங்கி வந்த மேற்படி நிறுவனத்தின் ஏற்பட்ட தீயினால் கோடிக்கான பெறுமதியான கட்டடப் பொருட்கள் எரிந்து அழிந்தும், முற்றாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதன்போது கனகபுரம் முறிப்பு வீதியின் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வாகன
நெரிசல் ஏற்பட்டது. அதிகளவான மக்கள் கூடியிருந்தமையால் அப்பகுதியில் கடும்
நெரிசல் ஏற்பட்டது. நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.











சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
