கொழும்பில் நிதி மோசடி சர்ச்சையில் சிக்கிய திலினி பிரியமாலி!வெளியான தகவல்
நிதிக் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் உள்ள திலினி பிரியமாலி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சிறைச்சாலையில் தமது கட்சிக்காரர் வழக்கத்திற்கு மாறான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், அவரது முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பில்லியன் கணக்கான பண மோசடி
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாக கூறப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலி சிறைக்குள் மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்படுவது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்திரசேன இந்த முறைப்பாட்டை முன்வைத்திருந்ததுடன், சிறைச்சாலை அதிகாரிகளின் வழக்கத்துக்கு மாறான உடல் சோதனைகளால் திலினி பிரியாமாலியின் அந்தரங்க உறுப்புகளிலும் காயம் ஏற்பட்டதாகவும், அதற்கான மருந்தையும் சிறைச்சாலை வைத்தியசாலை வழங்கியதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
திலினி பிரியாமாலியிடம் கைத்தொலைபேசி இருப்பதைக் கண்டறிந்த சிறைச்சாலை அவசரகால அதிரடிப் படை அதிகாரிகள் அவரிடம் வழமைக்கு மாறாக அடிக்கடி சோதனை நடத்துவதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
