சாதிக்காய் விலையில் பாரிய வீழ்ச்சி
இலங்கையின் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் (nutmeg) விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
1300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சாதிக்காயின் விலை தற்போது 700 ரூபாயாக குறைந்துள்ளது.
இலங்கையில் சாதிக்காய் உற்பத்தியின் 80 சதவீதம் கண்டி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன், சாதிக்காய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சாதிக்காய் உற்பத்தி
ஏற்றுமதி விவசாய திணைக்களம் பெற்றுத் தந்துள்ள தரவுகளின்படி 2022 ஆம் ஆண்டு நாட்டில் 2936 ஹெக்டேயர் நிலத்தில் சாதிக்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், 476.06 மெட்ரிட் தொன் சாதிக்காய் உற்பத்தியை ஏற்றுமதி செய்ததன் மூலம் 2022 இல் பெறப்பட்டுள்ள வெளிநாட்டு செலாவணி 797.18 மில்லியன் ரூபாவாகும்.
இந்நிலையில், சாதிக்காய் உற்பத்தி மூலம் பெறப்பட்ட வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை காண முடிவதாகவும், இதற்கு தீர்வாக அரசாங்கம் முன்வந்து சலுகைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |