சுனாமியால் பாதித்த டொங்கா தீவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு
பசுபிக் பெருங்கடலில் அண்மையில் எரிமலை வெடித்து சிதறியதில் கடும் பாதிப்புக்கு உள்ளான டொங்கா தீவுக்கு அருகில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவருகிறது. ஜீ.எம்.டி நேரம் 0640 அளவில் இன்று ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிச்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
14.5 கிலோ மீற்றர் பூமிக்கு அடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டொங்காவின் பெங்கய் என்ற இடத்தில் இருந்து வடமேற்கு திசையில் 136.1 கடல் மைல் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தை டொங்கா வாசிகள் கடுமையாக உணர்ந்துள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி டொங்கா தீவுக்கு அருகில் பசுபிக் பெருங்கடலில் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதனால், சுனாமி ஏற்பட்டதுடன் தீவுக்கு பெரும் அழிவு ஏற்பட்டது.
டொங்கா தீவுக்கு ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் நாடுகளை தாக்கும் அளவுக்கு சுனாமி ஏற்பட்டது.
இந்த சுனாமி காரணமாக டொங்கா நாட்டுக்கு இணைய வசதிகளை வழங்கும் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட இணைப்புகள் அழிவடைந்துடன் அது இதுவரை மறுசீரமைக்கப்படவில்லை.
இந்த நிலைமையால் டொங்கா தீவு ஏனைய உலக நாடுகளில் இருந்து தன்மைப்பட்டுள்ளதுடன் வெளி உலகத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா, ஜப்பான் மீது மேற்கொண்ட அணு குண்டு தாக்குதலை விட வீரியம் கொண்டதாக இந்த எரிமலை வெடிப்பின் தாக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
