கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பில் 4000 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமையவே குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்கள் 05 பேரும் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
4000 மில்லியன் ரூபாய் பெறுமதி
சுமார் 4000 மில்லியன் ரூபாய் பெறுமதியான 12 கிலோவுக்கும் அதிகமான “ஹெராயின்” மற்றும் “கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்” போதைப்பொருள் என்பன இந்த சுற்றிவளைப்பில் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படகில் இருந்து, 180 கிலோ மற்றும் 800 கிராம் நிறையுள்ள 160 ஹெராயின் பொதிகள் மற்றும் 31 கிலோ மற்றும் 512 கிராம் நிறையுள்ள ஐஸ் என்ற 28 கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் பொதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




