மதுவரித் திணைக்கள வருமானத்தில் பாரிய வீழ்ச்சி
கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் கலால் வருமானம் 12.2% குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் கலால் வருமானம் 28.6 பில்லியன் ரூபாவாகும் என கலால் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 25.1 பில்லியன் ரூபா வருமானம் குறைந்துள்ளது.
மதுபானத்தின் விலை உயர்வு
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் மதுபானத்திற்கு விதிக்கப்பட்ட வரி 20% அதிகரிக்கப்பட்டதால், மதுபானத்தின் விலை உயர்வு காரணமாக நுகர்வு குறைந்துள்ளது. இதன் காரணமாக,சட்டப்பூர்வ மது விற்பனை குறைந்துள்ளதால், கலால் வரி வருவாய் குறைந்துள்ளதாக, கலால் திணைக்களம் கூறுகிறது.
கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாத கலால் வருமானம் ஓரளவுக்கு சமமாக காணப்பட்ட போதிலும் இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் வரி வருமானம் குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கலால் திணைக்களத்திற்கு 217 பில்லியன் ரூபா வருமான இலக்கை அரசாங்கம் வழங்கியுள்ள போதிலும், அந்த இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கலால் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் உரிய கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்பதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மதுவரி திணைக்களம்
இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி இலங்கையில் சட்டவிரோத மதுபானம் 300% அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மதுவரித் திணைக்களம் மற்றும் மதுபான உற்பத்தியாளர்கள், மதுபான வரியை இரண்டாயிரம் ரூபாவால் குறைக்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
