சம்பள உயர்வை வலியுறுத்தி ஹட்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபா உடன் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (28.07.2024) இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.வேலுகுமார், முன்னாள் மாகாண உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
மலையக பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை, சம்பள உரிமை, வீட்டு உரிமை என்பன இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீள பெறப்பட்டமை தொடர்பிலும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு
இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததுடன், ஹட்டனில் உள்ள சில கடைகளிலும், முச்சக்கரவண்டிகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் நகர பகுதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து ஹட்டன் பிரதான நகர் வழியாக பேரணி மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கலகத் தடுப்பு பிரிவினரும், நீர் தாரை பிரயோக வாகனமும், ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பெருந்தொகையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த போராட்டம் காரணமாக ஹட்டன் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
|  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 







                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri