தேர்தலுக்கான அச்சிடும் பணிகள்: ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அடிப்படை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி கங்கா கல்பானி லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அச்சடிக்கும் பணிகளும், பிணைத் தொகை வைப்புத் தொகையும் இதுவரையில் நிறைவடைந்துள்ளன.
தேர்தல் அதிகாரி
தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் பத்திரிகைகளால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் உதவி தேர்தல் அலுவலர்களை தேர்தல் ஆணையம் அதிகாரியாக ஆணையகம் நியமித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான ஆவணங்களை அச்சிடும் பணிகள் தற்போது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அச்சகத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
