எதிர்க்கட்சிகளை ஒன்றிணைந்து பாரிய கூட்டணி! வெளிவந்துள்ள தகவல்
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பாரிய கூட்டணி உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் அனைத்து எதிர்க்கட்சிகளும் அணி திரட்டப்படும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த கூட்டணியில் இணைந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரிவான கூட்டணி ஒன்றுக்கு ரணில் விக்ரமசிங்கவும் ஒத்துழைப்பு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.