தென்னிலங்கையின் பிரபல ஆண்கள் பாடசாலையில் நடந்த பாரிய சிறுவர் துஷ்பிரயோக மோசடி
காலியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உனவடுன, மெதரம்ப சதாரா மகா தேவலாயாத்தின் படகொடகே வெஸ்லி கீர்த்தி குமார என்பவரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் பெற்றோர் முறைப்பாடு
சந்தேக நபர் இந்த பாலியல் நடவடிக்கைகளை படம்பிடித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒன்பது பேரை அடையாளம் கண்டு அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவரே தம்மைதேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள சந்தேக நபரின் இல்லத்திற்கு அழைத்து வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பாதிக்கப்பட்டவர்களை அத்துருகிரியவில் உள்ள தனக்குச் சொந்தமான மற்றொரு வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை பணத்தை சந்தேக நபர் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் அழுத்தம்
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA) பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து காணொளி அறிக்கைகளை பதிவு செய்துள்ளது.
போலி அறிவியலைப் போதிப்பதற்காக உள்ளூர் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றிய சந்தேக நபர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யச் சென்றபோது அவர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் காலியில் உள்ள பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் அவரை விடுவிக்க தலையிட முயற்சித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
