கிளிநொச்சியில் மாபெரும் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு
கிளிநொச்சியில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் வடமாகாண ஊழியர் நலன் புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த இரத்ததான முகாம் பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிளிநொச்சி கிளையில் இன்று(21-02-2026) பகல் நடைபெற்றுள்ளது.
குருதிக் கொடை
பிரதேச அபிவிருத்தி வங்கியில் ஊழியர்களாக கடமையாற்றி கொண்டிருந்த அமரர்களான தெய்வேந்திரன் பகீசன் மற்றும் தனிக்க சஞ்சீவ சுமணதாச பயிற்சி நெறியொன்றுக்காக அனுராதபுரத்துக்கு சென்று கொண்டிருந்தபோது வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தனர்.

இவர்களின் நினைவாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் வடமாகாண ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த இரத்ததான முகாம் பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிளிநொச்சி கிளையில் இன்று(21) இடம்பெற்றுள்ளது.
இதில் வங்கி முகாமையாளர் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர்.



மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam