மூத்த அமைச்சரின் 32 ஆண்டு கால அரசியல் கொண்டாட்டம்: உயர் மட்டத்தில் கவலை...! வெளியான காரணம்
அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் தனது 32 ஆண்டுகால அரசியலைக் கொண்டாடும் வகையில், அவரது அமைச்சினால் பாரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசியலில் அந்த அமைச்சரின் ஆண்டு நிறைவைக் கொண்டாட அவரது அமைச்சகம் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெறும் வகையில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
அரச உயர் மட்டத்தில் கவலை
இதற்காக, தெற்கில் உள்ள ஏழு வெவ்வேறு கிராமங்களில் ஏழு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அதன் கீழ் வரும் அனைத்து அரசாங்க அமைப்புகளின் தலைவர்களுக்கும் அவரது அமைச்சகம் அனுப்பிய கடிதம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த நிகழ்ச்சிகளுக்கு ஒருநாள் முழுவதையும் செலவிட அமைச்சர் திட்டமிட்டுள்ளதால், ஒவ்வொரு கிராமத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் வருகை, நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஒரு அரசியல்வாதியின் அரசியல் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிகழ்வுகளில் பொது அதிகாரிகள் முழு நாட்களையும் செலவழிக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
